1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (17:11 IST)

காலவரையரையற்ற வேலை நிறுத்தம் : ரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதியில் மாற்றம்?

காலவரையரையற்ற வேலை நிறுத்தத்தால் ரஜினியின் ‘காலா’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 27ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், கடந்த 1ஆம் தேதியில் இருந்து புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்தப் பிரச்னை எப்போது முடிவுக்கு வந்தாலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரிலீஸ் தேதிகளில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.
 
அதன்படி, படங்கள் சென்சார் செய்யப்பட்ட தேதி வாரியாகப் பார்த்தால், ஸ்டிரைக் இன்றைக்கே முடிவுக்கு வந்தாலும் ஏப்ரல் 27ஆம் தேதி படம் ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அத்துடன், தயாரிப்பாளர் சங்கம் தரவேண்டிய தடையில்லா சான்றிதழும் இன்னும் கிடைக்கவில்லையாம். எனவே, ஏப்ரலில் ‘காலா’ ரிலீஸாவது சந்தேகம் என்கிறார்கள்.