1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2025 (09:17 IST)

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

Ajithkumar

நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ளும் 24H கார் ரேஸ் இன்று துபாயில் நடைபெற உள்ள நிலையில் அதை இலவசமாக பார்ப்பது எப்படி என பார்ப்போம்.

 

 

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் அஜித்குமார் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். தற்போது நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் சர்வதேச 24H கார் ரேஸில் கலந்து கொள்கிறார். சமீபத்தில் இதற்கான பயிற்சி ரேஸின்போது அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த நாளே பயிற்சி ஆட்டத்தில் வந்து கலந்து கொண்டு சர்ப்ரைஸில் ஆழ்த்தினார்.

 

இந்நிலையில் இன்று அஜித்குமார் கலந்து கொள்ளும் ரேஸிங் போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1.25 மணியளவில் இந்த போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை காண பல நாட்டு தொலைக்காட்சிகளிலும் லைவ் ஸ்ட்ரீமிங் உரிமம் பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் எந்த சேனலிலும் இந்த ரேஸ் ஒளிபரப்பாகவில்லை.

 

ஆனால் யூட்யூப் வழியாக இந்த ரேஸை கண்டு களிக்கலாம். யூட்யூபில் உள்ள Creventic Motorsports TV சேனல் வழியாக அஜித்குமார் ரேஸை இலவசமாக காணலாம்.

 

Edit by Prasanth.K