விஸ்வரூபம் 2' டிரைலர் ரிலீஸ் எப்போது? கமல் அறிவிப்பு

Last Modified சனி, 3 மார்ச் 2018 (14:08 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படம் பலவித தடைகளை தாண்டி சூப்பர்ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெகுவிரைவில் உலக நாயகன் டியூப் என்ற தளத்தில் வெளிவரவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினியின் 'காலா' ஏப்ரல் 27ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அதற்கு முன்பே கமல், தனது படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :