1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Kaala and Viswaroopam2 release in same date?

ஒரே நாளில் காலா-விஸ்வரூபம் 2 ரிலீஸ்: நேருக்கு நேர் மோத முடிவா?

rajinikanth
நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்களுடைய அரசியல் பிரவேச முடிவை அறிவித்துள்ள நிலையில் ஒரே நாளில் இருவரது திரைப்படங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஏற்கனவே ரஜினியின் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. எனவே இந்த படத்தையும் அதே ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய கமல் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

ஏற்கனவே இதற்கு முன்னர் கமல்-ரஜினி ஆகியோர் படங்கள் கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ரஜினியின் சந்திரமுகி மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனதில் சந்திரமுகி சூப்பர் ஹிட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் பிளாப்பும் ஆனது. அதே நிலை 2018லும் தொடருமா? அல்லது மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
வேற்றுகிரக மனிதர்களுடன் மோத தயாராகும் சிவகார்த்திகேயன்