வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (12:21 IST)

திட்டமிட்டபடி தெலுங்கிலும் ரிலீஸாகுமா ‘காலா’?

திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் தேதி தெலுங்கிலும் ‘காலா’ படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாகிறது.
 
தமிழில் வெளியாகும் அதே தேதியில், தெலுங்கிலும் ‘காலா’ ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், அதிக விலை சொல்வதால், படத்தின் தெலுங்குப் பதிப்பு இன்னும் விலை போகவில்லையாம்.
 
அத்துடன், மகேஷ் பாபு நடித்துள்ள ‘பாரத் அனு நேனி’ மற்றும் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘நா பேரு சூர்யா’ ஆகிய படங்களும் அன்றுதான் ரிலீஸாகின்றன. எனவே, தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது என்கிறார்கள்.