திரையரங்குகளை இழுத்து மூட முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்
டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களான கியூப் மற்றும் யுஎஃப்ஓ திரைப்படங்களை திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கமும், டிஜிட்டல் நிறுவனங்களும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்தது
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே பல திரையரங்குகளில் 25% பார்வையாளர்கள் கூட இல்லாமல் ரிலீஸ் ஆன படங்களே மீண்டும் திரையிடப்பட்டு வந்தன
இந்த நிலையில் இன்று சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடரந்தால், திரையரங்குக்களை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனனத்து திரையரங்குகளும் மூடப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது
இன்றைய டெக்னாலஜி உலகில் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகளின் உதவி தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களுக்கு விற்பனை செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.