திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (16:04 IST)

வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன்- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

vijay bashkar
சென்னையில் தனிப்பட்ட வசதிகள் இல்லாத வாடகை வீட்டில் குடியிருப்பதாக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 16 இடங்களிலும்,   வேலூர் மருத்துவமனைக்கு முறைகேடாகச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக    சி விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாகவும் சோதனையின் முடிவில் தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

 
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பின், சென்னை அடையாரின் உள்ள தன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்   சி விஜயபாஸ்கர் கூறியதாவது:

லஞ்ச ஒழிப்புத்துறையின இரு பைகளை மட்டுமே என்னிடம் இருந்து கைப்பற்றினர். அடையாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான் வாடகைக்கு மட்டுமே குடியிருக்கிறேன். இங்கு தனிப்பட்ட வசதிகள் எதுவுமில்லை.  என் சொந்த ஊரில் எனக்கு இல்லம் இருப்பதால் சென்னையில் வாடகைக்கு குடியிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.