வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

திமுக அரசு மக்கள் விரேத அரசு: சசிகலா ஆவேச பேச்சு!

Sasikala
திமுக அரசு மக்கள் விரோத அரசு என்றும் அந்த அரசு கடந்த 15 மாதத்தில் எதுவும் செய்யவில்லை என்றும் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் சசிகலா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ஏற்கனவே ஆவின் பால், சொத்துவரி, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை உயர்த்திய திமுக அரசு விரைவு பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளனர் என்றும் மக்களை அழிப்பது தான் திராவிட மாடலா என்றும் திமுக அரசு மக்கள் விரோத அரசு என்றும் சசிகலா தெரிவித்துள்ளார் 
 
திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்றும் எனவே மீண்டும் அதிமுகவை வலிமையாக கொண்டு வருவது மட்டுமே எனது ஒரே குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்
 
எந்தவித சோதனைகள் இயக்கத்திற்கு வந்தாலும் கட்சியை வலிமைப்படுத்தி யாராலும் அசைக்க முடியாத கட்சியாக அதிமுகவை மாற்றுவோம் என்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு முடிவு கட்டுவோம் என்று சசிகலா பேசியுள்ளார். அவரது இந்த ஆவேசமான பேச்சு தொண்டர்கள் மத்தியில் பரவ ஏற்படுத்தியுள்ளது