போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்...பிரபல நடிகர்களின் பெயர் பட்டியல் ? அதிகாரி தகவல்
சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சம்பந்தமானவர்கள் போதை வழக்கில் கைதாகி வருகின்றனர். சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி போதை மருத்து தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 15 நடிகர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கலும் வெளியானது.
இந்நிலையில், ரியா சக்கரவர்த்தியிடம் விசாரித்ததில் சில நடிகர், நடிகைகளின் பெயரை அவர் கூறியதாகவும் அவர்களுக்கு என்சிபி பிரிவினர் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதில், சாரால் அலிகான்,சியொன் கபொட்டா,ரகுல் ஃபிரீத்சிங் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுபோன்ர எந்தவிதமான பட்டியலையும் தயார் செய்யவில்லை எனப்போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.