திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (19:30 IST)

சுஷாந்த் மரணம், போதை மருந்து கடத்தல் வழக்கு...15 நடிகர்கள் தீவிர கண்காணிப்பில் !

சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில்  ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் இன்று  தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது ரியாவுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து சம்மன் விடுக்கப்பட்டு அவர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். விசாரணையில் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.  இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.  இதுதொடர்பான விசாராணையில் பாலிவுட் நடிகர்கள் 15 பேர் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்கள் பி கிரேட் நடிகர்கள் எனவும்  தகவல் வெளியாகிறது.

மேலும் சுஷாந்த் சிங் வீட்டில் இருந்துதான் கூரிய மூலம் ரியா வீட்டிற்குய் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகவும், இப்பணியில் ஈடுப்பட்டவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  சுஷாந்த் மரண வழக்கில் போதைப் பொருள் ஊழல் வழக்கில்  ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுவை  மும்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.