புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:10 IST)

முன்னணி நடிகையின் செயலால் விமான நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை!

இந்திய திரையுலகில் பாலிவுட்டுக்கு எப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவர்களுக்கான சம்பளமும் அதிகம்.

பேரும் புகழும் அதிகம். ஆனால் அப்படிப்பட்ட பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பாஈ கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் கங்கனா ரனாவத் கடந்த 9 ஆம் தேதி விமானத்தில் செல்பி, போட்டோ, வீடியோ எடுத்தா விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு  இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோல் இந்நிலை தொடர்ந்தால் 2 வார காலத்திற்கு போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.