வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:03 IST)

முன்னணி நடிகைக்கு ஒய்.பிளஸ் பாதுகாப்பு ! இத்தனை கோடி செலவா?

இந்திய திரையுலகில் பாலிவுட்டுக்கு எப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவர்களுக்கான சம்பளமும் அதிகம்.  பேரும் புகழும் அதிகம். ஆனால் அப்படிப்பட்ட பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பை கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

இதற்கிடையே சிலரால் கங்கனா ரனாவத்திற்கு மும்பை வரக் கூடாது என மிரட்டல்கள் விடுக்கப்பட்டது.

ஆனால் தான் மும்பை முடிந்தால் தடுத்துப்பார் என்று கங்கனா சவால் விட்டால். பின்னர் உள்துறை அமைச்சர் கங்கானவுக்கு எடுத்துகூறி சில  காலம் வர வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் மும்பையிலுள்ள அவரது இடிக்கப்பட்டதுய். அதனால் அவர் அங்கு செல்ல நேரிட்டது.

அப்போது அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.  சிஆர்பிஎஃப் வீரர்களால் வழங்கப்படும் இந்தப் பாதுகாப்பை பெற்ற முதல் நட்சத்திரம் இவர் தான்.

இந்தியாவில் உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டமொத்தம் 60 பேருக்குத்தான் இப்பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில்  வருடம் தோறும் இதற்காக 26 ஆயிரம் கோடி செலவாகிறது.  இந்தியாவி முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி இதற்காக சில கோடிகள் வரை செலவழிக்கிறார்.  ஒருபடத்திற்கு பத்திலிருந்து பனிரெண்டு கோடிகள் சம்பளம் பெறும் கங்கனா இப்பாதுகாப்பிற்கு தன் சொந்தப் பணத்தைச் செலுத்துகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.