மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரெளபதி 2’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
கடந்த 2020 ஆம் ஆண்டு, இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இதுவரை சொல்லப்படாத கதையை பதிவு செய்யப் போவதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். திரௌபதி 2 என்ற தலைப்பில் இப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில், ஒரு பக்கம் கோவில் கோபுரம் காணப்பட, இன்னொரு பக்கம் அரசனின் கோட்டை அமைந்துள்ளது. கீழே, இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை குறிக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமான நிலையில், இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து மோகன் ஜி இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.