13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்த தென்னிந்திய திரைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
துல்கர் சல்மான் நடித்த "லக்கி பாஸ்கர்" என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தொடர்ச்சியாக 13 வாரங்கள் ட்ரெண்டிங்கில் இருந்து சாதனை செய்துள்ளது. இதையடுத்து, அந்த படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகின்றன.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான "லக்கி பாஸ்கர்" திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த அக்டோபர் 3ஆம் தேதி, தீபாவளி திருநாளில், இந்த படம் வெளியானது.
வங்கியில் பணிபுரியும் ஒரு அதிகாரி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், வங்கியில் உள்ள நிர்வாக ஓட்டைகளை எப்படி பயன்படுத்துகிறார் என்பது குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம், தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், திரையரங்கு வெளியீட்டுக்கு பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பானது. கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஓடிடியில் வெளியான இதைத் தொடர்ந்து, 13 வாரங்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளது.
Edited by Mahendran