உங்கள் ஜாதியில் இதை முதலில் செய்யுங்கள்.. பா ரஞ்சித் பதிவுக்கு மோகன் ஜி பதிலடி..!
வெற்றிமாறன் தயாரித்த பேட் கேர்ள் என்ற திரைப்படத்தின் டீசரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, படத்தின் குழுவினர்களுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்த பதிவுக்கு உங்கள் ஜாதியில் முதலில் இதை செய்து காண்பியுங்கள்," என்று இயக்குனர் மோகன் ஜி பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்த்து பாராட்டிய பா. ரஞ்சித், "மிகவும் தைரியமான, புத்துணர்ச்சியான படம்," என்றும், "இப்படி ஒரு படத்தை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்," என்றும் கூறியுள்ளார். மேலும், "பெண்களின் போராட்டத்தை இந்த சினிமா புதிய பாணியில் சொல்லி இருக்கிறது," என்றும், "தனித்துவமான படம்," என்றும் பாராட்டியுள்ளார்.
இந்த பதிவுக்கு மோகன் ஜி பதிலடி கொடுத்த போது, "பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது எப்போதுமே உங்களைப் போன்றவர்களுக்கு தைரியமான, புத்துணர்ச்சியான படமாக தான் இருக்கும். வெற்றிமாறனிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" என்று குறிப்பிட்டார்.
மேலும் "பிராமண தாய் தந்தையை பழி வாங்குவது பழையது. உங்கள் சொந்த ஜாதியில் இதை முயற்சித்து பார்த்து ,அந்த படத்தை உங்கள் குடும்பத்தினருக்கு போட்டு காமியுங்கள்," என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva