குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து தவறான கருத்து: சோனியா காந்தி மீது புகார்..!
குடியரசு தலைவர் குறித்து தவறான கருத்தை கூறிய சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் வெளியே வந்த சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் படித்தால் பாவம் உரையின் இறுதியில் ஜனாதிபதி சோர்வாக காணப்பட்டார் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சோனியாவின் கருத்துக்கு ஜனாதிபதி மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை என்றும் உண்மையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்காக உரையாற்றும் போது சோர்வு ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து தவறான கருத்து தெரிவித்த சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரிக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது. எனவே சோனியா காந்தி கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
Edited by Siva