விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தோடு மோதுகிறதா கவினின் ‘கிஸ்’ திரைப்படம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் கிஸ் படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவருக்குப் பதில் தற்போது ஜென் மார்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. சமீபத்தில் டீசரும் ரிலீஸாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படமும் ரிலீஸாகவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.