தனுஷின் 'பட்டாஸ்' படத்தின் பக்கா ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது
இந்த நிலையில் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு படக்குழுவினர் 'பட்டாஸ்' என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷூக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அப்படி எந்த பட்டமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், சினேகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசை அமைத்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வருட தீபாவளி விஜய், தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பான தீபாவளியாக இருக்கும் என கருதப்படுகிறது