ராஷ்மிகாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கன்னட ரசிகர்கள் – அப்படி என்ன சொன்னார் ?

Last Updated: சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)
கன்னடத்தில் டப்பிங் பேசுவதுதான் சிரமமாக இருந்ததாக சொன்ன ராஷ்மிகாவுக்கு எதிராக கன்னட ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஹிட் ஜோடியின் இரண்டாவது படமாக டியர் காம்ரேட் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் நேற்று வெளியானது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ளார்.

படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தானாவிடம் எந்த மொழியில் டப்பிங் பேசியது சிரமமாக இருந்தது என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ’கன்னடத்தில் பேசுவது சிரமமாக இருந்தது’ எனக் கூற இப்போது கன்னட ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கர்நாடகாவில் பிறந்த ராஷ்மிகா எப்படி கன்னடம் பேசுவது கடினம் என்று சொல்லலாம் என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

நேற்று வெளியான இந்தப்படம் அனைத்து மாநிலங்களிலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :