செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (21:01 IST)

விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித் : தல ரசிகர்கள் கொண்டாட்டம்

இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் இருந்து ‘சிங்கப்பெண்ணே ‘ என்ற பாடல் நேற்று (ஜூலை 23) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இப்பாடலை உலக அளவில் ட்ரெண்ட் செய்யவேண்டுமென விஜய் ரசிகர்கள் மும்முரமாக களத்தில் இறங்கி ட்விட்டரில் மூழ்கி கிடக்கின்றனர். 
இதனால் அஜித் ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ஏதேனும் அப்டேட்ஸ் வராதா என காத்திருந்த வேலையில் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். ஆம்,  நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து அஜித்  - வித்யா பாலன் இடம்பெறும் "அகலாதே" என்ற பாடல் நேற்றூ மாலை 6 மணியளவில் வெளியானது. 
இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் அப்பாடலை பலமுறை கேட்படியே உள்ளனர். இந்நிலையில் எனவே நேற்று வெளியான நேர்கொண்ட பார்வையின் "அகலாதே" பாடல் ,பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடலை முறியடித்ததுள்ளது.
பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் 44 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. நேர்கொண்ட பார்வையின் அகலாதே பாடல் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. எனவே அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.