விஜய் படத்தால் அட்லீக்கு ஏற்பட்ட தலைவலி! ரசிகர்கள் புலம்பல்!

Last Updated: சனி, 27 ஜூலை 2019 (16:04 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'பிகில்' படத்திற்காக இணைந்துள்ளார். 


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான  பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.  வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படத்தின் படப்பிடிப்புகளை விறுவிறுப்பாக நடத்தி வந்தனர். ஆனால் தற்போது படத்தின் ஸ்டெண்ட் மாஸ்டர் சண்டைக்காட்சிக்கு எனக்கு இன்னும் 22 நாட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார். அதை கேட்டுஅட்லீக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது, இந்த முறையாவது சொன்ன தேதியில் படத்தை முடித்துக்கொடுக்கலாம் என்று பார்த்தால் இப்படி ஆகிவிட்டதே என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். 
 
எனவே தீபாவளி தினத்தில் படத்தை திருவிழாவாக கொண்டாட நினைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனால் ஆளாளுக்கு புலம்பு வருகின்றனர் . 


இதில் மேலும் படிக்கவும் :