சிவகார்த்திகேயனின் ரூட் க்ளியர் – கைவிடப்பட்டது விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ !

Last Modified வெள்ளி, 26 ஜூலை 2019 (14:34 IST)
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ஹீரோ படம் கைவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் தேவராகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஹிட் காம்பினேஷனில் ஹீரோ என்ற படம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்க ஒப்பந்தமானார்.டில்லியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு கிட்டதட்ட 20 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

ஆனால் எடுத்த காட்சிகளைப் பார்த்தபோது அவை திருப்தியளிக்காததால் படத்தை மேற்கொண்டு எடுக்கவேண்டாம் எனப் படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் ’ஹீரோ’ படத்தை கைவிட முடிவுசெய்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கும் படத்துக்கும் ஹீரோ எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில் இந்தப்படம் கைவிடப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் படத்துக்கு இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :