1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2025 (18:19 IST)

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Jananayagan

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பட டீசர் விஜய் பிறந்தநாளில் வெளியாகிறது.

 

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் தற்போது அரசியலில் காலெடுத்து வைத்துள்ள நிலையில் தனது கடைசி படமாக ‘ஜனநாயகன்’ இருக்கும் என அறிவித்துள்ளார். இதனால் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். 

 

இந்த படத்தின் அப்டேட்கள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வரும் நிலையில் அன்று ஏதாவது அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலை மையப்படுத்தி இயங்குவதால் பிறந்தநாளன்று பட அப்டேட்கள் வேண்டாம் என விஜய் கூறியதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.

 

ஆனால் ஒருவழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் பட டீசர் வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K