வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (19:28 IST)

எனது மகள் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம்: சித்ராவின் தந்தை காமராஜ் பதில் மனு!

Chithra
எனது மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் மர்மமான முறையில் மரணமடைந்தார்
 
இதனை அடுத்து அவரது கணவர் ஹேமந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை காமராஜ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்
 
அந்த மனுவில் ஹேமந்த் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ராவை சித்திரவதை செய்ததன் காரணமாகத்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பதில் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது