பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் படம் ரிலீஸ் தேதி சில முறை அறிவித்தும் இன்னும் ரிலீஸாகவில்லை.
இந்த படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலிஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் சில தடவை அறிவிக்கப்பட்டு தாமதம் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான ஜி ஸ்டியோஸ் மற்றும் கங்கனா ஆகியோர் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதன் பின்னர்தான் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கங்கனா ரனாவத் இந்த படத்தைப் பார்க்க காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தியை அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் “நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்த போது அவரை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்தேன். அவரும் வருவதாக சொல்லியுள்ளார். அவர் படம் பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.