செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (13:39 IST)

நான் திருமணம் செய்ய மாட்டேன்.. காரணம் இதுதான்! – மனம் திறந்த சுஷ்மிதா சென்!

Sushmita sen
பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.

இந்திய சினிமாவில் 90கள் முதலாக பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் சுஷ்மிதா சென். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள 1994ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் பங்கேற்று உலக அழகி பட்டத்தையும் வென்றவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சுஷ்மிதா சென் திருமணம் செய்யாமலே இரண்டு பெண் குழந்தைகளை மட்டும் தத்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஷ்மிதா சென் “எனது வாழ்க்கையில் இருந்த சில மனிதர்கள் என்னை ஏமாற்றியதே நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம். எனது வாழ்வில் மூன்று முறை திருமணத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டபோது கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார்” என்று பேசியுள்ளார்.