வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (09:46 IST)

சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்!

மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன லூசிபர் திரைப்படம் தற்போது தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

சமீபத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து  சல்மான் கான் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக காட்பாதர் உருவாகி வருகிறது. இதையடுத்து இப்போது முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் சிரஞ்சீவியின் லுக் வரும் ஜுலை 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.