வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (23:27 IST)

''என்னை சிறையில் அடித்து உதைத்தனர்''- பிரபல நடிகை

ketaki chitale marathi actress
பிரபல நடிகை ஒருவர் தன்னை சிறையில் வைத்து அடித்து உதைத்த்தாக தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா  மாநிலத்தில் சமீபத்தில் அரசியல் குழப்பம் மற்றும் உட்கட்சிப் பூசலால், முதல்வர் உத்தவ் தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கவிழ்ந்து, தற்போது முதல்வராக ஷிண்டே தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆட்சியில் குறித்து பிரபல நடிகை கேதகி சிதலே தனது முக நூல் பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில், சரத்பவார் ஆட்சியில் என்னை கைது செய்தனர். அப்போது, ஒரு மாதத்திற்குப் பின் தான் ஜாமீன் கிடைத்தது. என்னை சட்டவிரோதமாக கைது செய்து, சிறையில் சித்ரவதை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.