புஷ்பா படத்தை அடுத்து மீண்டும் ஒரு ஐட்டம் டான்ஸ்: சமந்தா முடிவு!
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தா மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் திரைப்படம் லிகர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் இடம்பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த ஐட்டம் டான்ஸை சமந்தாவை ஆட வைக்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
புஷ்பா படத்திற்கு ஐட்டம் டான்ஸ் ஆட கொடுத்த சம்பளத்தை இந்த படத்திற்கும் கொடுத்து விடலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட சமந்தா ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது