1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (16:52 IST)

’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடிய சமந்தாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
நடிகை சமந்தா தற்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு மூன்று முதல் நான்கு கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இந்த நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடனமாட அழைப்பு வந்தது
 
அந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா தயங்கியதாகவும் ஆனால் அல்லு அர்ஜுன் நேரடியாக சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி 5 கோடி சம்பளம் தருவதாக கூறியதை அடுத்து அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து ‘ஓ சொல்றியா மாமா பாடலுக்கு  சமந்தா வாங்கிய சம்பளம் 5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மூன்றே மூன்று நிமிடங்கள்தான் வரும் என்றும் இந்த பாடலை படமாக்க சுமார் 7 மணி நேரம் மட்டுமே ஆனதாகவும் கூறப்படுகிறது
 
ஏழு மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ள சமந்தாவை பார்த்து தெலுங்கு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது