ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:50 IST)

கன்னத்தில் அறைந்த மணமகனை வெளியே துரத்திய மணமகள்: திடீர் மாப்பிள்ளையான விருந்தாளி!

மணமேடையில் தன்னை திடீரென மணமகன் கன்னத்தில் அறைந்ததால் மணமகனை துரத்திவிட்டு திருமணத்திற்கு வந்த இளைஞர் ஒருவரை மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பண்ருட்டி அருகே ஜெயச்சந்திரா என்ற எம்எஸ்சி பட்டதாரி பெண்ணுக்கு ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடக்க ஏற்பாடு நடைபெற்றது
 
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் தனது சகோதரர்களுடன் நடனமாடினார். இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகன் ஸ்ரீதர் மணமகள் ஜெயசித்ராவின் கன்னத்தில் அறைந்தார்
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயச்சந்திரா ஸ்ரீதரை திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியதோடு மணமகனையும் அவரது குடும்பத்தாரையும் திருமண மண்டபத்தை விட்டு விரட்டி அடித்தார் 
 
அதன்பின்னர் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவரான கோபிநாத் என்பவரை இரு வீட்டார் கலந்து பேசி திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் பண்ருட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது