ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (10:42 IST)

தெலுங்கு சினிமாவின் இரண்டாம் குத்து – ராம்கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள்!

தெலுங்கு சினிமாவின் இரண்டாம் குத்து – ராம்கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள்!
ராம்கோபால் வர்மா இயக்கி தயாரித்துள்ள டேஞ்சரஸ் படத்தின் கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
தெலுங்கு சினிமாவின் இரண்டாம் குத்து – ராம்கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள்!

இந்நிலையில் இப்போது புதிதாக டேஞ்சரஸ் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய படம் என சொல்லப்படுகிறது. இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் கவர்ச்சிகரமான போஸ்டர்களை இப்போது அவர் வெளியிட்டுள்ளார். அது தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவின் இரண்டாம் குத்து – ராம்கோபால் வர்மா வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள்!