வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (10:36 IST)

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி – ஹீரோ யார் தெரியுமா?

நடிகர் ஜெயம் ரவி விரைவில் ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி ஆளவந்தான் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இயக்குனராக ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்தவரை அவரின் அண்ணன் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக்கினார். அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து இப்போது தமிழின் டாப் 10 இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் மனதில் ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்ற ஆசை இன்னமும் இருக்கிறதாம். அதற்காக ஒரு கதையை உருவாக்கி அதை நடிகர் யோகி பாபுவிடம் கூறியுள்ளார். அந்த படத்தின் கதாநாயகன் அவர்தானாம். விரைவில் இந்த படம் தொடங்கப்படலாம் என ஜெயம் ரவியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.