1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2022 (17:24 IST)

சுவை மிகுந்த வேர்க்கடலை பர்ஃபி செய்ய !!

Peanut Burfi
தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் (தோல் நீக்கியது)
பொடித்த வெல்லம் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 ஸ்பூன்



செய்முறை:

வேர்க்கடலையை சுத்தம் செய்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு மண் இருக்கும் அதை தவிர்க்கவே வடிகட்ட வேண்டும்.

வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மீண்டும் கொதிக்க விடவும். பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும். அதில் சிறிது ஏலக்காய் தூளை சேர்க்கவும். சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். இது தான் சரியான பதம்.

ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போட்டு எடுத்தால் சுவையான வேர்க்கடலை பர்ஃபி தயார்.