புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 மே 2022 (18:09 IST)

எளிமையான முறையில் சுவை மிகுந்த குடைமிளகாய் சட்னி செய்ய !!

Capsicum chutney
தேவையான பொருட்கள்:

பச்சை குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 2 பற்கள்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
புளி/மாங்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்கவேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, புளி அல்லது மாங்காய் தூள், உப்பு, பொட்டுக்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்தால், குடைமிளகாய் சட்னி தயார். இதனை கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால், சட்னியானது நன்கு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.