1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. Make the Achu Murukku in Superb Taste !!

சூப்பரான சுவையில் அச்சு முறுக்கு செய்ய !!

Achu Murukku
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
மைதா மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
தேங்காய் பால் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி



செய்முறை:

துருவிய தேங்காய் பூவை 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும்.

எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் எடுத்தால் சொட்டாமல் இருக்க வேண்டும். எண்ணெய்யை காயவைத்து அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும்.

கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெய்யில் விட்டு லேசாக அசைக்க வேண்டும். முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து பொன்னிறமாக வரும். பிறகு எண்ணெய்யை வடித்து எடுக்கவேண்டும். சுவையான அச்சு முறுக்கு தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!