தனுஷ் மாதிரி இல்லாம சிம்பு மாதிரியா இருப்பான்? முட்டாள்தனமான கேள்விக்கு நறுக் பதில்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது தொடர்ந்து வித்தியாசமான பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பு பல பாராட்டுக்கள், விருதுகள் என அவரை பெருமைப்படுத்துகிறது.
கடைசியாக வாத்தி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து போட்டியில்லா நடிகராக இன்று வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் தனுஷின் வாதி படத்தில் நடித்துள்ள கருணாஸ் மகன் கென் பேட்டி ஒன்றில் கலகலப்பான பதில் கூறி கைதட்டல் வாங்கியுள்ளார்.
தனுஷ் மகன் லிங்கா அப்படியே தனுஷ் மாதிரியே இருக்காரே இதைப்பற்றி நீங்கள் அவரிடம் கேட்டிருக்கிறீர்களா? என தொகுப்பாளர் கேட்க, அவர் மகன் அவர் மாதிரி தான் இருப்பார். அப்படி இல்லன்னா தான் அந்த கேள்வி கேட்கணும் என கூறி நக்கல் அடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன் ஒருவர், தனுஷ் பையன் மாதிரி இல்லாம சிம்பு மாதிரியா இருப்பான்? ட்ரோல் செய்துள்ளனர்.