1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (09:42 IST)

கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த துணிவு பட நடிகர்… லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது தென்காசி அருகே போடப்பட்டுள்ள செட்டில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் அருண் மாதேஸ்வரன். ஏற்கனவே படத்தில் சந்தீப் கிஷன், சிவராஜ் சிவகுமார், பிரியங்கா மோகன், சுதீப் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் சமீபத்தில் உறியடி படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனான விஜயகுமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது சார்பட்டா பரம்பரை மற்றும் துணிவு ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜான் கொக்கன் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.