காமெடி இனிமே வொர்க் ஆகுமான்னு தெரியல… ஹீரோவாகவே தொடர விரும்பும் சூரி!
நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படம் மூலமாக ஹீரோவாகியுள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'உன்னோட நடந்தா என்ற பாடல் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் நேற்று வெளியான பாடலை சுகா எழுத, தனுஷ் பாடியுள்ளார். வெளியானதில் இருந்து பாடல் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
விடுதலை திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸுக்கு முன்பாகவே கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சூரி, இனிமேல் காமெடி வேடங்கள் தனக்கு வேலைக்கு ஆகுமா என யோசிப்பதாகவும், அதனால் தொடர்ந்து நல்ல கதைக்களத்தோடு வரும் இயக்குனர்களின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.