1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (04:01 IST)

ஐபிஎல் 2018" மும்பைக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐபிஎல் 2018
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு முதல் வெற்றி ஆகும். 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதல் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி, தொடக்க ஆட்டக்கார்ரகள் யாதவ் மற்றும் கிஷான் விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே இழந்தாலும் பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் லீவீஸ் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. ரோஹித் 94 ரன்களூம், லீவீஸ் 65 ரன்களும் குவித்தனர்,.
 
ஐபிஎல் 2018
இந்த நிலையில் 214 என்ற இமாலய இலக்கை நோக்கி விரட்டிய பெங்களூர் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. டீகாக் மட்டுமே 92 ரன்கள் குவித்தார். ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.