செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (21:13 IST)

ஆரம்பமே தடுமாற்றம்; அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி

ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் மும்பை அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை - பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை ஆட்டத்தின் ஆரம்பத்திலே தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
 
இதையடுத்து தொடக்க வீரர் எவிஸ் லெவிஸ் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். எவின் லெவிஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மும்பை அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.