திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர், தொடரின் மிக முக்கியமான பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னதாக வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ காரணமாக, பாகிஸ்தான் தேசிய அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விலகலுக்கு பின்னால் சில கசப்பான சம்பவங்களும் இருப்பதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீசனில் பாபர் ஆசம் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 202 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்ம் அவுட்டில் இருந்தார். குறிப்பாக அவரது ஸ்டிரைக் ரேட் டி20 தரத்திற்கு மிக குறைவாக இருந்ததால், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் உள்ளிட்டோர் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று விமர்சித்தனர்.
மேலும், சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஸ்டீவ் ஸ்மித் ரன் ஓட மறுத்து பாபர் ஆசமிற்கு ஸ்டிரைக் கொடுக்காதது பெரும் சர்ச்சையானது. இதனால் அதிருப்தியடைந்த பாபர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது மட்டையால் விளம்பரத் தடுப்புகளை அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். மோசமான ஃபார்ம், சக வீரர்களுடனான மோதல் மற்றும் தேசிய அணியின் அழைப்பு ஆகிய காரணங்களால் பாபர் ஆசம் பிபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விடைபெற்றுள்ளார்.
Edited by Siva