ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:16 IST)

உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி!

pregnanadha
உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். 
 
இந்த போட்டி மூன்று சுற்றுஆக நடந்தது. முதல் இரண்டு சுற்றுகள் டிரா ஆனதை அடுத்து இன்று 3வது சுற்று நடைபெற்றது. 
 
இதில் முதல் சுற்று இந்தியாவின் பிரக்யானந்தாவை நார்வே நாட்டின் மேக்னஸ் காரல்சன் வீழ்த்தினார். இதனை அடுத்து இரண்டாவது சுற்று டிரா ஆனால் கூட மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதனால் இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இருப்பினும் இறுதிவரை சென்ற பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran