செஸ் உலகக்கோப்பை: மாக்னஸ் கார்ல்சனுக்கு புட்பாய்சன்...பிரக்ஞானந்தாவுக்கு சாதகம்?
செஸ்ஸில் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதல், அவரது உடல்நல பாதிப்பு பிரக் ஞானந்தாவுக்கு சாதகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
10வது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனானன நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ள நிலையில் ப்ரக்ஞானந்தாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நேற்று நடந்த இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிற்கு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், இன்று இரண்டாவது சுற்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதல், அவரது உடல் நல பாதிப்பு பிரக் ஞானந்தாவுக்கு சாதகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நேற்றைய போட்டி முடிந்தபின், செய்தியாளர்களை சந்தித்த கார்ல்சன், அரையிறுதியில் வெற்றி பெற்ற பின்னர், எனக்கு புட்பாய்சன் ஆனதால், பிரக்ஞானந்தாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில், என்னை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், இரண்டு நாட்களாக என்னால் சாப்பிடமுடியவில்லை. எனினும் முதல் சுற்றில் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
எனவே, கார்ல்சனின் உடல்நிலையைப் பொருத்து அவரது ஆட்டத்திறன் மாறலாம் இது பிரக்ஞானந்தாவுக்கு சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.