1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (15:53 IST)

உலகக்கோப்பை செஸ் போட்டி.. இன்றும் டிரா ஆனால் என்ன நடக்கும்?

carlsen vs praggnanandhaa
உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும்  மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் மோதவுள்ளனர். நேற்று நடைபெற்ற முதலாவது இறுதிப்போட்டி டிரா ஆனது.
 
 இதனை அடுத்து இரண்டாவது சுற்று இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ளது.  இன்று கார்ல்சன் ஒயிட் காயின் மற்றும் பிரக்ஞானந்தா கருப்பு காயின்களில் விளையாடுவார்கள்.  
 
ஒருவேளை இன்று நடக்கும் போட்டி டிரா ஆனால் டை பிரேக்கர் முறையில் ரேபிட் செஸ் முறைப்படி நடைபெறும் அதன்படி 2 போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை காயினிலும், அடுத்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை காயினிலு விளையாடுவார்கள். ஒவ்வொருவரும் 25 நிமிடங்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 10 நொடிகள் வழங்கப்படும்.
 
இந்தப் போட்டியும் டிரா ஆனால் அடுத்த சுற்று போட்டிகள் மீண்டும் ரேபிட் செஸ் முறைப்படி நடைபெறும். இந்த முறை இன்னும் நேரம் குறைக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.  ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 10 நொடிகள் வழங்கப்படும்.
 
இந்தப் போட்டியும் டிரா எனில், அடுத்த சுற்று போட்டிகள் ப்ளிட்ஸ் முறையில் நடைபெறும். இந்த முறை இன்னும் நேரம் குறைக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.   ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 3 நொடிகள் வழங்கப்படும்.
 
இதிலும் முடிவு தெரியவில்லை என்றால் ப்ளிட்ஸ் முறையில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு போட்டி நடைபெறும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக இரண்டு நொடிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran