வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

கோலிக்கு பிசிசிஐயின் பதில் என்ன? மௌனம் ஏன்?

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி சமீபகாலமாக பிசிசிஐ யால் ஓரங்கட்ட படுகிறாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாக சென்று கொண்டிருந்தாலும் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.

இந்நிலையில் விராட் கோலி தாமாகவே முன்வந்து டி 20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பை துறந்தார். மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தொடர்வேன் என அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்து ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரிடம் இருந்து இப்போது ஒருநாள் கேப்டன்ஷிப் பிசிசிஐ ஆல் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ தலைவர் கங்குலி சொன்ன கருத்துகளுக்கு மாறானவைகளை கோலி கூறி அதிர்ச்சிகளைக் கிளப்பியுள்ளார்.

ஆனால் கோலியின் கருத்துக்கு பிசிசிஐ எந்த மறுப்போ விளக்கமோ இதுவரை அறிவிக்கவில்லை என்பது பிசிசிஐ க்குள் என்ன நடக்கிறது என்ற சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.