வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (12:56 IST)

இதுபோல மோசமான ஃபீல்டிங் இருந்தால் தோல்விதான்! – விராட் கோலி கருத்து

இந்தியா – வங்கதேசம் இடையே நடந்த இரண்டாவது டி20 தொடரில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது குறித்து கேப்டன் விராட் கோலி தனது கருத்துகளை கூறியுள்ளார்.

இந்தியா வங்கதேசம் இடையேயான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றாலும், இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவியது.

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் 10 ரன்களை தாண்டியதுமே விக்கெட்டை இழக்க, ஷிவம் துபே ஒரு அரைசதம் வீழ்த்தி ரன்ரேட்டை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் 170 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்தது இந்தியா. பிறகு பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களிலேயே இந்தியாவின் ரன் இலக்கை கடந்து 173 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் வெற்றிப்பெற்றது.

இதனால் டி20 போட்டி 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது. இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ”கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் மோசமான ஃபீல்டிங் இருந்தால் வெற்றி பெறுவது கடினம். தொடரும் ஆட்டங்களில் ஃபீல்டிங்கை சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது” என கூறியுள்ளார்.