டி - 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி !

kohli
Last Modified ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (15:26 IST)
கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி,   50 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.  அதன் மூலம் ஆட்ட நாயகனாகவும் செயல்பட்டார்.
ஏற்கனெவே அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றோர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி முதலிடத்திலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரட் சாஹுத் அப்ரிடி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
 
இந்நிலையில்  அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றோர் பட்டியலில், கோலியும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி ஆகியோர் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :