புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (22:32 IST)

விராட் கோஹ்லி அபாரம்: 208 ரன்கள் இலக்கை எளிதில் எட்டிய இந்திய அணி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. ஹெட்மையர் 56 ரன்களும் லீவிஸ் 40 ரன்களும் கேப்டன் பொல்லார்டு 37 ரன்களும் எடுத்தனர் 
 
இதனை அடுத்து 208 என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும்,அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக அடித்து ரன்களை உயர்த்தினர் 
 
விராட் கோஹ்லியின் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேஎல் ராகுல் 62 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
 
94 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது