வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (13:16 IST)

2 வருட கணக்கை பழி தீர்த்த கோலி: நோட் புக் ஸ்டைல் பதிலடி!!

வெஸ்ட் இண்டீஸ் வீரரை கலாய்த்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
விராட் கோலியின் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேஎல் ராகுல் 62 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியின் போது விராட் கோலி வில்லியம்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்து பவுண்டரிக்கு விரட்டிய கோலி ஆரவாரமாக கொண்டாடும் வகையில் நோட் புக் ஸ்டைலில் கொண்டாடினார். கடந்த 2017 ஆம் ஆண்டு இதே போல கோலி விக்கெட்டை வீழ்த்தி வில்லியம்ஸ் நோட் புக் ஸ்டைலில் அவரை வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து பேட்டிக்கு பின்னர் கோலி கூறியதாவது, ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின் போது நோட் புக் வழி அனுப்புதல் கிடைத்தது. அதனை இப்போது திருப்பி கொடுத்துவிடேன். எனினும் ஆட்டம் முடிந்த பின்னர் அனைவரும் புன்னகையுடன் கை குலுக்கினோம் என தெரிவித்தார்.